Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க வாழைப்பழ ஹேர் மாஸ்க் !!

Advertiesment
தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க வாழைப்பழ ஹேர் மாஸ்க் !!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (23:55 IST)
முகத்துக்கு பயன்படுத்துவது போன்று கூந்தலுக்கும் பயன்படுகிறது. ஹேர் மாஸ்க் கூந்தல் பிரச்சனைக்கேற்ப தீர்வு தரும். கூந்தல் கட்டுகடங்காமல் வறண்டு இருந்தால் நீங்கள் வாழைப்பழ பேக்கை தேர்வு செய்யலாம். இவை கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும்.
 
கூந்தல் பேக் தயாரிக்க தேவையானது: நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1, தயிர் - 1 மேசைக்கரண்டி, தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி, சுத்தமான ஆலிவ் அல்லது  தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி, கற்றாழை சாறு - தேவைக்கு ஏற்ப.
 
செய்முறை: முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். கைகளால் மசித்தாலும் போதும் பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ஆலிவ்  எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு நன்றாக கடையவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும்  செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வரும். இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.
 
இந்த பேக்கை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது கூந்தல் அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருந்தால் பேக் சரியாக கூந்தலில் பிடிக்காது.  இப்போது பேக் போடலாம். பிறகு முடியை பாகங்களாக பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு நிதானமாக தடவ வேண்டும்.  முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில்  ஊறவிடலாம்.
 
பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும்  ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும்.
 
முடி உயிரூட்டம் பெறுவதால் கூந்தல் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புடலங்காய் சமைத்து சாப்பிடுவதால் நன்மைகள் தெரியுமா...?