Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூட்டுவலிக்கு (Arthritis) அக்குபஞ்சரில் தீர்வு !!

மூட்டுவலிக்கு (Arthritis) அக்குபஞ்சரில் தீர்வு !!

மூட்டுவலிக்கு (Arthritis) அக்குபஞ்சரில் தீர்வு !!
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (15:38 IST)
வலி, இறுக்கம், வீக்கம், போன்றவை மூட்டுகளில் ஏற்படும்பொழுது அதை ஆர்த்தரைட்டீஸ் (Arthritis) என்று அழைக்கிறோம்! இந்த ஆர்த்ரைட்டீஸ்களில் பலவகைகள் உள்ளன. இந்த ஆர்த்ரைட்டீஸ் ஆண், பெண் இருபாலருக்கும் வித்தியாசமின்றி வரக்கூடும்.


 
 
- உடல் பருமன் அதிகரித்தல் 
- எலும்பு தேய்மானம் 
- தொற்று நோய் 
- மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுத்தல்
 
போன்ற காரணங்களால் வருகிறது, பலவகையான மூட்டுவலிகள் இருப்பதால் காரணங்களும் பலவகைப்படும். எனவே, எந்த காரணத்தால் மூட்டுவலி ஏற்பட்டுள்ளது என்பதை முதலில் தெளிவாக பரிசோதனைகளின் மூலமாக கண்டறியப்படுவது அவசியமாகிறது. முறையான பரிசோதனைகளை செய்துக்கொள்வது மிகவும் முக்கியம். 
 
இந்த மூட்டுவலிகளை பின்வரும் அறிகுறிகள் கொண்டு அறியலாம்.
 
- மூட்டுகளில் வலி 
- இறுக்கம் 
- மூட்டுபகுதி சூடாக இருத்தல் 
- மூட்டுகளை மடக்குவதில் சிரமம் 
- மூட்டுபகுதி சிவந்து காணப்படுவது
 
மேலும் பல அறிகுறிகள் ஆர்த்ரைட்டீசால் ஏற்படும். முறையான அக்குபங்க்சர் புள்ளிகளை உபயோகித்து சிகிச்சை அளிக்கும் போது இந்த முட்டிவலியை முழுவதுமாக களையமுடியும். 
 
எனவே கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஆர்த்ரிட்டீஸ் (Arthritis) எனும் முட்டிவலி பிரச்சினையில் இருந்து முழுமையாக குணம் பெறலாம் 
 
அக்குபங்க்சர் புள்ளிகள்: 
ST 34, ST 35, ST 36, ST 43, K3, UB 40 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்

webdunia








வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெந்தயத்தின் குணங்களைக் கூறும் சித்த வைத்திய முறைகள்