Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?

, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (21:17 IST)
இதய நோய் என்பது இந்தியாவின் குடும்ப சொத்தாகிவிட்டது போல உலகிலேயே அதிக இதய நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளார்களாம். இதற்கு முக்கிய காரணம் இந்தியர்களின் உணவுப்பழக்க வழக்கம் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அறிக்கை




 
 
இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு இதயநோயாளிகள் இறந்து கொண்டிருக்கின்றார்களாம். மாரடைப்பு என்பது என்ன? இதை முன்கூட்டியே தவிர்க்க முடியாதா? இதற்கான அறிகுறிகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்
 
இதய நோய்க்கான முக்கிய அறிகுறிகள்:
 
1. உறக்கத்தில் பிரச்சனை: 
 
உறங்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை வைத்தே இதயநோயை சீக்கிரம் உணர்ந்து கொள்ளலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராகப் படுத்திருக்கும்போது உறங்கமுடியாமல் கடினமாக உணர்வார்கள். ஏனெனில் அவர்களுடைய நுரையீரலில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர், புவியீர்ப்பால் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு அந்த நீர் நுரையீரல்களுக்கு இடையே அதிகமாகப் பரவும். இந்த உண்மை தெரியாமல் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரையை எடுத்து கொண்டால் இன்னும் நிலையமை சீரியஸாகத்தான் முடியும்
 
2. எடை வேகமாக அதிகரிக்கின்றதா? அப்படியெனில் ஜாக்கிரதை
 
ஒரு மனிதனுக்கு எடை சராசரியாக அதிகரித்தால் அது நார்மல் எடை. ஆனால் ஒருசிலருக்கு திடீரென எடை அதிகரிக்கும். இதற்கு முக்கிய காரணம்  இதயத்தில் நீர் கோத்தல் அல்லது இதய அடைப்பு ஆகியவையே.  ரத்தக்குழாய்களில் கோத்துள்ள நீர், சுற்றியுள்ள திசுக்களிலும் சேர்ந்து எடை அதிகரிக்கும் வாய்ப்பைக் கூட்டும். எனவே திடீரென உடல் எடை அதிகரித்தால் உடனே டாக்டரை அணுகவும்
 
3. கால், அடிவயிறு வீங்குகிறதா?
 
கால், பாதம் ஆகிய இடங்களில் நீர் கோத்துக்கொண்டு இதனால் அந்த  இடங்களில் வீக்கம் ஏற்படுகின்றதா? உங்களை இதய நோய் எட்டிப்பார்க்கின்றது என்று அர்த்தம். ஏனெனில் இந்த வீக்கம் காரணமாக, நரம்புகள் நம் வயதுக்கு ஏற்றபடி ஒத்துழைக்காது, வேலை செய்யாது. அதேபோல் அடிவயிற்றில்  நீர் கோத்துக்கொண்டு, கல்லீரலிலும், செரிமானத் தடத்திலும் ஏற்பட்டிருக்கும் அடைப்பு காரணமாக கடுமையான வலி ஏற்படும். இதற்கு நாம் உட்கொள்ளும் அதிகமான அளவு உப்புக்கூட காரணமாக இருக்கலாம்.
 
4. அளவுக்கு மீறிய சோர்வா?
 
உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒருசிலர் ரொம்ப சோர்வாகவே இருப்பார்கள். இதயச் செயலிழப்பு அல்லது இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதாலும் அதிக சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும்போது கடுமையான சோர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
5. அடிக்கடி மூச்சுத்திணறல் மற்றும் வேர்வை:
 
சின்ன வேலையை செய்தால் கூட ஏற்படும் மூச்சுத்திணறல் ஆபத்தானது. இது இதய நோய்க்கான பொதுவான அறிகுறி. மிக எளிதான வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு காரணமும் இல்லாமல் சிலருக்கு வேர்க்கும். இதுவும் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளில் ஒன்று

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?