Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்லப் பிராணிகள் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

செல்லப் பிராணிகள் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
, வெள்ளி, 31 மார்ச் 2017 (02:00 IST)
நம்முடைய வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருவது என்பது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கம். முன்பெல்லாம் நாய், கோழி, மாடு வளர்க்காத வீடுகளே இருக்காது. ஆனால் காலப்போக்கில் பெருகி வரும் மக்கள் தொகை, மனிதர்கள் வாழ்வதற்கே இடமில்லாமல் போய்விட்டதால் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.


 



இருப்பினும் இன்னும் ஒருசிலர் நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் போன்ற விலங்குகளை வளர்த்து வருகின்றனர். வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலர் சிலசமயம் எதிர்பாராத விதமாக அந்த பிராணிகள் கடித்துவிட்டாலோ அல்லது நகத்தினால் பிராண்டிவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. இப்போது அதை பற்றி தெரிந்து கொள்வோமா...

1.  செல்ல பிராணிகளான நாய், பூனை கடித்தாலும், பறவைகள் கொத்தினாலும், உடனே செய்ய வேண்டிய முதல் வேலை குழாயைத் திறந்துவிட்டு வேகமாக வரும் தண்ணீரின் அடியில் கடித்த பகுதியை வைத்து, சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். குறைந்தது பத்து நிமிடங்கள் வரை தண்ணீரில் கழுவுவது பாதுகாப்பானது

2. பின்னர் மருத்துவரிடம் சென்று டி.டி. என்ற டெட்டனஸ் ஊசியை போட வேண்டும். ஒருவேளை நாய் கடித்திருந்தால் ஆன்டி-ரேபிஸ் என்ற ஊசியை போட வேண்டும். இந்த ஊசியை முதல் நாள் போட்டால் மட்டும் போதாது. தொடர்ந்து 3, 7, 14, 28ம் நாள் என மொத்தம் ஐந்து ஊசிகள் போட வேண்டும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடி, வெளவால் கடி போன்றவற்றுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படும். எனவே, இந்த விலங்குகள் கடித்தாலும் டாக்டர் பரிந்துரையின்படி தடுப்பூசி போட வேண்டும்

3  எலி கடித்தாலோ அல்லது எலியின் கழிவுகளை மிதித்தாலோ லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும்  எலிக் காய்ச்சல் வர வாய்ப்பு உண்டு. இதனால் உடனடியாக அதற்குரிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ள வேண்டும்.

4. பாம்பு கடித்தால் செய்வது போல  விலங்குகள் கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறு அல்லது துணியை இறுக்கமாகக் கட்டி ரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிகிச்சையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

5. மேலும் வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம். அதுமட்டுமின்றி கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று பிராணிகளின் எடைக்கு ஏற்றபடி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடல் புழு மருந்து (De-worming) கொடுக்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்கிறீர்களா? விரல்கள் பத்திரம்