Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூந்தல் பாதுகாப்புக்கு ஒருசில பயனுள்ள டிப்ஸ்

கூந்தல் பாதுகாப்புக்கு ஒருசில பயனுள்ள டிப்ஸ்
, செவ்வாய், 21 மார்ச் 2017 (23:30 IST)
பெண்களுக்கு கூந்தல் என்பது மிக முக்கியமான ஒன்று.கூந்தலை பராமரிக்க என்றே பல ஆயிரங்கள் செலவு செய்யும் பெண்கள் இருக்கின்றனர். ஆனால் கூந்தலுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல் மிக எளிய வழிமுறைகளின் மூலம் பராமரிப்பது எப்படி? என்று தற்போது பார்ப்போம்



 



1. ஒரு பங்கு தேங்காய் எண்ணெயில் அரை பங்கு கரிசலாங்கண்ணிச் சாறு ஆகியவற்றை கலந்து காய்ச்சிபெண்களுக்கு கூந்தல் என்பது மிக முக்கியமான ஒன்று.கூந்தலை பராமரிக்க என்றே பல ஆயிரங்கள் செலவு செய்யும் பெண்கள் இருக்கின்றனர். ஆனால் கூந்தலுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல் மிக எளிய வழிமுறைகளின் மூலம் பராமரிப்பது எப்படி? என்று தற்போது பார்ப்போம், அதன்பின்னர் நன்றாக வடிகட்டி 21 நாட்கள் பெண்கள் தங்கள் தலையில் தடவி வந்தால், தலைமுடி நன்றாக வளரும்.

2. முட்டையின் வெள்ளை கருவுக்கு முடியின் வேரை வலிமையுள்ளதாக மாற்றும் தன்மை உண்டு. எனவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து உலர வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடி மென்மையாகவும் பொலிவோடும் இருக்கும்

3. வழுக்கை ஆண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிப்பதற்கு முன்பு, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் இளநரை மற்றும் வழுக்கை தோன்றாமல் இருக்கும்

4. மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதன் மூலம் முடியின் முனைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்பை நீக்கிவிடலாம். இதனால் தலைமுடி நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும்

5. என்ன தான் சிகிச்சை எடுத்து கொண்டாலும் தலைமுடிக்கு உண்மையாகவே வலிமை தரக்கூடியது சுத்தமான தேங்காய் எண்ணெய்தான். வாரம் ஒருமுறை தவறாமல் தேங்காய் எண்ணெயை நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் தலைமுடி கருகருவென இருக்கும்  

6. தலைமுடியை சீவும் சீப்பில் கவனம் கொள்தல் வேண்டும். கூர்மையான பிளாஸ்டிக் சீப்புகளை தவிர்த்துவிட்டு, மிருதுவான முதல் தர பிளாஸ்டிக் அல்லது மரச் சீப்பைப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி பாதுகாப்பாக இருக்கும்

7. சூரிய ஒளியில் முடிபடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக கோடையில் தலையில் வெயில் படாமல் இருந்தால் முடியில் வறட்சி ஏற்படாமல் இருக்கும். வெயிலில் சென்றுதான் தீர வேண்டும் என்று இருந்தால் தொப்பி அல்லது துப்பட்டாவை தலையில் போட்டு கொள்ளுங்கள்

8. தலைக்கு குளித்தவுடன் எலெக்ட்ரானிக் ஹேர் டிரையரை பயன்படுத்துவது நல்ல முறை அல்ல. இயற்கையாக உலர வைப்பதுதான் தலைமுடிக்கு ஆரோக்கியம்.

9. வெங்காயத்தை நீரில் வேகவைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம். வெங்காயச் சாற்றைக்கொண்டு முடியை மசாஜ் செய்து, ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம், முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

10. போதிய தூக்கம் இல்லாததும் முடிகுறைய ஒரு காரணம். அனைவருக்கும் குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். அவ்வாறு தூங்கினால் முடியின் ஆரோக்கியமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைவரும் விரும்பும் சுவைமிக்க இறால் பிரியாணி செய்ய வேண்டுமா...?