Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைவலியும் மருந்தில்லா மருத்துவத்தில் தீர்வும்

தலைவலியும் மருந்தில்லா மருத்துவத்தில் தீர்வும்

தலைவலியும் மருந்தில்லா மருத்துவத்தில் தீர்வும்
, திங்கள், 28 மார்ச் 2016 (14:32 IST)
தலைவலி இல்லா மனிதனை காண்பது மிக அரிதாகிவிட்டது. இரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் நம் உடலின், மனதின், உணர்வின் மூலமாக ஏற்பட்டு தலைவலி உண்டாகிறது.


 

 


தலைவலி பல வகைப்படும்!.
 
மைக்ரைன் எனப்படும் ஒற்றைத்தலைவலி மிக கொடுமையானது. இவ்வகை தலைவலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பதம் பார்க்கும். இது பித்தப்பை மற்றும் கல்லீரலின் சக்தி ஓட்ட குறைபாட்டினால் ஏற்படுகிறது. நெற்றி பகுதியில் ஏற்படும் தலைவலிக்கு சரியற்ற வயிறும் ஒரு காரணமாகின்றது.
 
இப்படி வரும் தலைவலிக்கு மருந்தோ, மாத்திரையோ இல்லாமல் அக்குபிரசர் / அக்குபங்க்சர் மருத்துவ முறையின் மூலம் நம்மை நாமே சரி செய்து வலியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். அக்குபிரசர் / அக்குபங்க்சர் ஒரு மருந்தில்லா மருத்துவ முறை மட்டுமல்ல பக்கவிளைவுகளற்ற மருத்துவ முறையுமாகும். 
 
மிக கடுமையான  தலைவலியோ, மயக்கமோ, மங்கிய பார்வையோ ஏற்படின் தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசித்தல் நலம் பயக்கும்! 
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள அக்குபிரசர் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்! 
 
அக்குபுள்ளிகளில் உங்கள் கட்டை விரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் கொடுத்தல் சிறந்த நிவாரணம் பயக்கும்.
 
GB 20, ST 36

webdunia


webdunia

 


 -அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி

webdunia

Share this Story:

Follow Webdunia tamil