Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவுப் பொருட்களில் கலோரிகள்: தெளிவான விவரம் தேவை என்கிறது ஆய்வு

உணவுப் பொருட்களில் கலோரிகள்: தெளிவான விவரம் தேவை என்கிறது ஆய்வு
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (07:34 IST)
உணவு மற்றும் பானங்கள் விற்கப்படும்போது, அவைகளை ஜீரணித்து, அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளை செலவழிக்க எந்த அளவு உடற்பயிற்சி தேவைப்படும் என்ற தகவல்கள் அடங்கிய லேபல்கள் ஒட்டப்படவேண்டும் என்று பொதுச் சுகாதாரத்துக்கான ராயல் சொசைட்டி கூறுகிறது.

உணவு உண்டபிறகு அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளை உடற்பயிற்சி மூலம் எரிக்க ( செலவழிக்க) எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது என்பதை பொதுவாக மக்கள் குறைத்தே மதிப்பிடுகிறார்கள்.

290 கலோரிகள் கொண்ட ஒரு மோக்கா காஃபியால் கிடைக்கும் சக்தியைச் செலவழிக்க 53 நிமிட நடைபயிற்சி தேவைப்படுகிறதாம்.

இது போல உணவுப் பொருட்கள் மீது லேபல்கள் ஒட்டப்படவேண்டும் என்ற யோசனை பரிசீலிக்கப்பட உகந்தது என்று உணவு மற்றும் பானத் தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன.

மக்கள் தொந்தியுடன் இருப்பதற்கு பொதுவான காரணம் , அவர்கள் செலவழிக்கும் கலோரிகளைவிட , அதிக கலோரிகள் கொண்ட உணவுப் பொருட்களை உண்கிறார்கள் என்று ராயல் சொசைட்டியின் கொள்கை அறிக்கை ஒன்று கூறுகிறது.

மிகவும் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் எடையை இழக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்று அது கூறுகிறது.

இந்தப் பாக்கெட்டுகளின் லேபல்களில் ஒட்டப்படும் பயிற்சிக்கான குறியீடுகள், பொருட்களை வாங்குபவர்கள் மேலும் சுகாதாரமான பொருட்களை வாங்கவோ, அல்லது மேலும் அதிக உடற்பயிற்சி செய்யவோ தூண்டும் என்று அது கூறுகிறது.

இப்போது உணவுப் பொருட்களில் வெளியிடப்படும் உணவுச் சத்து விவரங்கள், தரப்படும் தகவல்கள் அதிகமாக இருப்பதால், குழப்பமடையச் செய்கின்றன என்று ஆய்வு காட்டுகிறது.

உணவுப் பொருட்களை வாங்குபவர்கள் பொருட்களின் மீது ஒட்டப்படும் லேபல்களைப் படிக்க ஆறு விநாடிகளே ஒதுக்குகிறார்கள்.

எனவே இந்த லேபல்களில் தரப்படும் விவரங்கள் எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

நடைபயிற்சி தேவைப்படும் விவரங்களை சித்திரவடிவில் பிரசுரித்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அது கூறுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil