Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் தூங்கும்போது உள்ளாடை அணியலாமா?

Advertiesment
women
, வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:46 IST)
பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் போது நைட்டி உடை மாறிவிடுகின்றனர்.  ஆனால் அவர்கள் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. இது முற்றிலும் தவறு. தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணியகூடாது. குறிப்பாக உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.


 


சரி தூங்க போகும் பெண்கள் வேறு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!

1. காலையில் போட்டிருந்த மேக்கப்பை தூங்க செல்லும்போது நிச்சயம் கலைத்துவிட வேண்டும். அதேபோல் தலைமுடி அலங்காரத்தையும் நீக்கிவிட்டு முடியை ஃப்ரியாக விட வேண்டும்

2. காண்டாக்ட் லென்ஸ் அணியும் வழக்கமுடைய பெண்களாக இருந்தால் நிச்சயம் அந்த லென்ஸை நீக்கிவிட்டு கண்களை நன்றாக கழுவிவிட்டுத்தான் தூங்க வேண்டும்

3. முடிந்தவரை தூங்க செல்லும்போது நகைகள் மற்றும் அணிகலன்களை கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் தூக்கத்தில் குத்தி, பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.

4. தூங்குவதற்கு முன் செல்போனை உங்கள் அருகில் வைக்காமல் சிறிது தொலைவில் வைத்துவிடுங்கள். கூடுமானவரை சுவிட்ச் ஆப் செய்துவிடுவது நல்லது. செல்போனின் கதிரியக்க அலைகள் தூக்கத்தை கெடுக்கும் தன்மை உடையது

5.  கர்ப்பிணி பெண்களாக இருந்தால் மாலை அல்லது இரவில் அதிக அளவு தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பதை தவிர்க்கலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது. ஆனால் அதே நேரத்தில்  குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்வளவு அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா கசகசாவில்...