பாஜகவின் தூக்கத்தை கெடுத்த ராகுல் காந்தி; குஷ்பு டுவீட்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (13:01 IST)
தனி மனிதனாக ஒட்டுமொத்த பாஜக படைக்கு எதிராக நின்று பாஜகவின் தூக்கத்தை கெடுத்தது குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெரிகிறது என குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகளில் தற்போது வரை பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 
 
20 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக வெற்றிப்பெற்று அதன் கோட்டையை தக்கவைத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
அதில், ராகுல் காந்தி தனி மனிதனாக ஒட்டுமொத்த பாஜக படையையும் எதிர்த்து நின்றது குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மூலம் தெரிகிறது. காங்கிரஸ் பாஜகவிற்கு உறக்கமில்லா இரவுகளையும், கொடுங்கனவுகளையும் கொடுத்து வருகிறது. நாங்கள் அவர்களை குலுக்கி விட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.
 
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் விளைவு குஜராத்தில் எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments