Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ்டர் மோடி..உண்மையாகவே உங்களுக்கு மகிழ்ச்சியா? - பிரகாஷ்ராஜ் கேள்வி

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (12:53 IST)
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றியைடைந்தது பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


 
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கம் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் வெளியானது. அதில், அதிக எண்ணிக்கையில் பாஜகவே முன்னிலையில் இருப்பதால் பாஜகவே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “ டியர் பிரதமர். உங்களின் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். ஆனால், உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக் கூறினீர்களே என்னவாயிற்று?


 
பாகிஸ்தான், மதம், சாதி தாண்டி  நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. வளர்ச்சியடையாத கிராமங்கள், மறுக்கப்பட்ட விவசாயிகளின் குரல் உங்களுக்கு கேட்கிறதா? இல்லை இன்னும் சத்தமாக கத்த வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments