Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யானைக்குட்டியை தாலாட்டி பாடி உறங்கவைக்கும் பெண் : வீடியோ

யானைக்குட்டியை தாலாட்டி பாடி உறங்கவைக்கும் பெண் : வீடியோ
, வியாழன், 15 அக்டோபர் 2015 (16:00 IST)
ஒரு பெண்ணின் தாலட்டைக்கேட்டு ஒரு யானைக்குட்டி உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ சமிபத்தில் வெளியாகி பலரின் மனதில் இடம் பிடித்தது.


 
 
வாழ்வாதரமின்றி தவித்த ஒரு யானையின் குடும்பத்தை, தாய்லாந்தின் சாய் லாய் ஆர்க்கிட் எனும் வன விலங்குகள் பாதுகாபு அமைப்பு பாதுகாத்து வருகிறது. அந்த குடும்பத்தில் உள்ள பெண் யானை மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு குட்டி போட்டது.
 
அந்த குட்டியானை அந்த அமைப்பில் உள்ள ஒரு பெண் ஊழியரிடம் நெருங்கி பழகி வருகிறது. ஒரு குழந்தை போல், அவர் பாடும் தாலட்டுப் பாடலில்தான் தூங்குகிறது. அந்த வீடியோவை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கிறது.
 
அந்த யானை குடும்பத்தை கவனித்து வரும் அமைப்பு, அந்த யானைகளுக்கென தனி சரணாலயம் அமைக்க மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது.
 
தாலாட்டு கேட்டு உறங்கும் யானைக்குட்டியை நீங்களும் பாருங்கள்....


 

Share this Story:

Follow Webdunia tamil