எனக்கு என் அம்மா வேணும் : பேசும் அதிசய நாய் (வீடியோ)

வியாழன், 1 அக்டோபர் 2015 (16:26 IST)
"சிம்பா” என்ற நாய் "எனக்கு என் அம்மா வேனும்” என்று பேசும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
செல்லப்பிராணிகளில் நாய் எப்போது மனிதர்களிடம் அன்பும்,பாசமும் கொண்டது. தன் எஜமானின் வரவை எதிர்பார்த்து எப்போதும் காத்திருக்கும் பிராணி அது. அந்த விசயத்தை சிம்பா என்ற நாய் நிரூபித்திருக்கிறது.
 
தன் நண்பரிடம் சிறிது நேரம் தனது செல்ல நாயைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அதன் எஜமானி வெளியே சென்றிருக்கிறார். தனது எஜமானியை காணாமல் தவித்த “சிம்பா” எனக்கு அம்மா வேணும் (ஐ வாண்ட் மம்மா) என்று சோகமாய் கூறுகிறது.
 
அதை உடனடியாக பதிவு செய்து அந்த நபர் யூடியூப்பில் பதிவு செய்து விட்டார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 

வெப்துனியாவைப் படிக்கவும்