Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020- ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்: ’’இதுவரை இல்லாத வேலையிழப்புகள்’’

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (23:28 IST)
இதுவரை இந்த உலகம் கண்டிராத பெரும் துயரத்தை இப்போது கண்டுகொண்டிருகிறது. பேரழிவு என்பது இரண்டாம் உலகப்போரைப்போல் ஹைட்ரஜன் அணுகுண்டுகளை விமானத்தில் சுமந்துகொண்டுபோய் பகைநாட்டில் போட்டுவிட்டுத் தப்பி வருமளவு சிரத்தையெடுக்க வேண்டாம்! ஒரு சிறிய ஆய்வுக்கூடத்திலிருந்து ஒரு தீநுண்மி என்ற வைரஸை உருவாக்கினாலோ அல்லது விலங்குகளிடமிருந்து பரவினாலோ போதும் அது காட்டுத்தீப்போல் வெகுவிரையில் கண்டம்விட்டுக் கண்டம்தாண்டி அனைத்துயிர்களையும் வதைக்கிற அளவு வீரியமுள்ளதாக இருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இபோது நம்மிடையே தும்மினால் கூடத் தொற்றிவிடுமோ என உயிருக்குப் பயந்துநடுங்கவைத்துள்ள கொரொனா வைரஸ்.

இந்த உயிர்க்க்கொல்லி வைரஸ் மூலம் உலக நாடுகள் சந்தித்துள்ள பேராபத்துகளும் பொருளாதார இழப்புகளும் வேலையிழப்புகள் உலகப்பெரும் வல்லரவு நாடுகளின் தலையெழுத்தையே மாற்றுமளவு விஸ்வரூபமெடுத்துள்ளதால் இதை நாம் வெறுமனே பேசிவிட்டுப் போய்விடமுடியாது.

கடந்த  மார்ச் மாதத்தில் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கிய கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டி அரசு பொது ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் எண்ணற்ற குடும்பங்கள் வாழ்வாரத்தை இழந்து வாடி வதங்கினர். சாலையோர வாசிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை; இருப்பினும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளாலும் அரசின் விழிப்புணர்வாலும் அவர்களின் பசியும் ஆற்றப்பட்டது.

இந்நிலையில், இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையமான  சி.எம்.சி.இ கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டது. இதில் அனைத்து வகைத் தொழில்துறையினரும் அடக்கம். இது கடந்த நான்கு ஆண்டில் இல்லாத வேலையிழப்பு உள்ளதால் பெருந்தொற்று வேலையிழப்பு ஆகியவற்றால் 45 % இந்தியர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தற்போது கொரோனாகால ஊரடங்கின் பிடியிலிருந்து சிறிதளவு தளர்வுகள் கிடைத்துள்ளதால் மக்கள் ஒரளவு  தங்களின் வாழ்வாரத்தை மீட்கத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் அடுத்த மூன்று மாதத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைநிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். நோய்த் தொற்றைக் குறைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே உண்டு என்ற பொறுப்புடன் முககவசமும், சமூக இடைவெளியும் நமது அவசியமென்று கருதி வேலைஸ்தளத்திலும், பொதுவெள்யிலும் நடந்துவந்தால் நாம் மீண்டும் பொத் ஊரடங்குச் சிதரவதைகளையும் வேலையிழப்புகலையும் பொருளாதாரப் பற்றாக்குறைகளையும் சந்திக்கத் தேவையில்லை.

இது இயற்கை நமக்குக் கொடுத்துள்ள பாடம் எனவும், இதிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ள நிறையவுள்ளது என்பதை தெரிந்துகொண்டால் போதும். அடுத்து இதுபோல் பெருந்தொற்று வராமால் தற்காத்துக்கொள்ளவும், அப்படியே வந்தாலும் அதிலிருந்து விடுபடவும் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல்காந்திதான் என்னை தள்ளிவிட்டார்.. மண்டை உடைந்த பாஜக எம்.பி குற்றச்சாட்டு! நாடாளுமன்ற களேபரம்!

24 வயது இளம்பெண்ணை கடித்து குதறிய சிறுத்தை.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

கேரள முதல்வருடன் கைகுலுக்க தெரிந்த ஸ்டாலினுக்கு இதை செய்ய திராணியில்லையா? ஈபிஎஸ் ஆவேசம்

ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் 1,000 ரூபாய் அபராதம்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. 2 ராணுவ வீரர்கள் காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments