Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2020- முக்கிய நிகழ்வுகள்: ''அரசியல் புயல் ரஜினிகாந்த் ''

Advertiesment
2020- முக்கிய நிகழ்வுகள்: ''அரசியல் புயல் ரஜினிகாந்த் ''
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (20:40 IST)
நான்கு தசாப்தங்களாக ஒருநடிகரால் தமிழ் சினிமாவைக் கட்டிப்போட முடியுமென்றால் அது ரஜினியால் முடிந்திருக்கிறது. இன்னும் இளம் நடிகர்களுக்குப் போட்டியால் வெற்றிக்குதிரையாகவே சினிமாவில் ரேஸில் கலந்துகொண்டு தன்னைச் சுறுசுறுப்பாக இயங்கவைத்துக்கொள்ளும் அவரது உழைப்பின் உறுதியே அவருக்கான உயரத்தை வானளவு நிர்ணியித்துள்ளது.

அவரது குறைகளாகவே எல்லோரும் சொல்லுவது, அவர் வீசியப்புயலுக்கும், தமிழகத்தின் தேவைக்கும், எழுவரின் விடுதலைக்கும் குரல்கொடுக்காமல் இருப்பதாகவும், தனது மொத்தச் சொத்துகளையும்  கர்நாடகாவில் குவித்துவைத்தும், சமீபத்தில் தன் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிய கட்சியில் பொறுப்புகள் வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கியதையும் பார்த்த பலரும் ரஜினிகாந்த் ‘’என்னை வாழ வைத்த தெய்வங்களே’’ என தமிழக மக்களைப் பார்த்துக் கையெடுத்து வணங்குவதாகவும் கூறுகிறார்கள்.

அது அவரவரின் பார்வை.

ஆனால், இத்தனை ஆண்டுகளில் அவர் தனக்குப் பிடித்ததைத்தான் தனது ரசிகர்களுக்கும் செய்ய வேண்டுமென்று அவர்  கூறியதில்லை. அவர் குறைந்தநேரத்தில் அதிகச் சம்பளத்தில் லாபம் கொழிக்கும் விளம்பரத்திலும் சுயநலத்துடன் கால்பதிக்கவில்லை; ஒருமுறை மாணவர்களிடம் கூட படியுங்கள் என்று கூறினார். இதுவும் அவர் சமூகத்தின் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண அபிப்பிராயத்தினால் அவருக்கான புகழின் இமேஜை மேலும் கூட்டி அவரை சட்டமன்றத் தேர்தலில் தனது சினிமா பிம்பத்தைத் தாண்டி போட்டியிடுவதற்கான ஒருவலுவான காரணமாகவும் இருக்கலாம்.

ஆன்மீக அரசியல் என்பது அவர் கையாண்டுள்ளது. ஆனால் அவர் கூறியது ஒரிருமுறைதான் என்றாலும் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையை அவருக்குப் பிடிக்காதவர்கள் கூட உச்சரிக்காமல் இருந்ததில்லை; அவரது பெயரையும் சேர்த்துத்தான் என்பதே அவரது பஞ்ச் வசனத்தைப் போல் மக்களிடம் அவரது செல்வாக்கை அதிகரிக்கச் செய்துள்ளது.

இன்றுகூட அவரது மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினியின் கட்சி தேர்தல ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான சின்னமாக ஆட்டோ ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அரசல் புரசலாக வெளியானது. ஆனால் முறையான அறிவிப்புகள் வெளியாகும்வரை காத்திருங்கள் என்று ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஆக ஒரு தலைவராகவே ரஜினியைக் கருதும் அவரது ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படத்திலும் தங்களுக்குக் காட்டிய எளிமையின் சின்னத்தை, வாழ்க்கையில் முன்னேறும் உத்வேகத்தை அவர்களுக்குள் விதைத்துவிட்டதும் ஒரு காரணம். இந்தக் கட்சியின் பெயரும் கூட தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற பிரமுகர் ஒருவர் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

ரஜினி திடாவிட அரசியலுக்கு எதிராகவோ, ஏற்கனவே இருக்கிற கட்சிகளுக்கு எதிராகவோ தனது கட்சியை ஆரம்பித்துள்ளதாக கமல்ஹாசனைப் போல் வெளிப்படையாகக் கூறவில்லை. படத்தில்கூடத் தனகுத் தேவைப்படும்போதுதான் அவர் பஞ்ச் வசனத்தைத் தெரிவிக்கவிட்டார். அதேபோல் ஊழலுக்கு எதிராகப் பேசியவர்,  தன்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது என்று தெளிவாகக்கூறிவிட்டார். எனவே ஆந்திராவில் கட்சி தொடங்கி மூன்றே மாதத்தில் ஆட்சியைப் பிடித்த என்.டிஆர்.ஐப் போல் ஒரு அரசியல் எழுச்சி அடுத்தாண்டு நடக்கலாம்..இல்லையென்றால் ஏற்கனவே களம்கண்ட நடிகர்களைப் போல் ரஜினி ஓட்டுகளில் பின் தங்க நேரிடலாம்…

ஏழ்மையில் இருந்து உச்சம் இன்று உச்சத்தில் சிறகடிக்கும் ரஜினிகாந்த் அரசியல் பாடமும் கற்றுக்கொள்வார் என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர வெறுப்பு அரசியலைப் பூசிட வேண்டாம். ரஜினியின் அவ்வப்போது கூறிய அவரது அரசியல்நிலைப்பாடு குறித்த கருத்துகள் பலருக்கு குழப்பியிருக்கலாம் ஆனால் அவர் இன்னமும் தனத் தொழில்பக்தி மற்றும் வரும்முன் காப்பதை அறிந்தே சிலவற்றைக் காய் நகர்த்திவருகிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஏனென்றால் அவரது மார்க்கெட் இன்னும் உச்சநடிகர் அந்தஸ்த்தில் ஹீரோ ஸ்தானத்தைவிட்டுக் கீழிறங்காமலுள்ளதும் அதற்குக் காரணம்.

ஒருவேளை அவர் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நின்றாலோ நிற்காமல் வேறு எவரையும் நிறுத்தினாலோ அவரது கட்சிக்கு ஓட்டுப்போடவுள்ள மக்களின் நிலைப்பாடுதான் அடுத்ததேர்தலில் ஓட்டாகப் பதிவாகி அது மாநிலத்தலைமையைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பாக மாறும்…
 மக்களுக்கு யாரை ஆட்சியில் அமர்த்துவது என்று நன்கு தெரியும்…

ரஜினிகாந்த் அவர்களை மக்கள் சினிமா ஸ்டாராகப் பார்க்கிறார்களா? இல்லை தங்களின் கஷ்டங்கலைத் தீர்த்துவைக்க வந்த அரசியல் ரட்சகனாகப் போகிறார்களா ? என்பதைத் காலமும் தேர்தலும் மக்களின் மனப்பூர்வமான வாக்குகளுமே தீர்மானிக்கும்.

ஜனநாயகத்தின் மக்களே அரசர்கள்…வாக்குகள் அவர்களது உரிமையுள்ள ஆயுதம்
அதனால் யாராலும் வெறும்வாயால் ஊரளக்க முடியாது. விமரசங்களாலும் குறைகளாலும் மட்டும் ஒருவரை இகழ முடியாது. அவரது திறமையையும் மக்களின் செல்வாக்கையும் குறைந்துவிடமுடியாது.

சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!