மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ ஹோம் பைனான்ஸ் வைப்பு நிதிக்கு 11.15 விழுக்காடு வட்டி அளிப்பாதக அறிவித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ ஹோம் பைனான்ஸ் வீடு, வணிக வளாகங்கள் கட்ட கடன் வழங்கி வருகிறது.
இதில் வைப்பு நிதி செலுத்துபவர்களுக்கு வருடத்திற்கு 11.15 விழுக்காடு வட்டி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இத்துடன் மூத்த குடிமக்கள் செலுத்தும் வைப்பு நிதிக்கு கூடுதலாக 0.35% சேர்த்து, மொத்தம் 11.50 விழுக்காடு வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 15,20,30 மாதங்கள் செலுத்தும் வைப்பு நிதிக்கு வழங்கப்படும்.
தற்போது பங்குச் சந்தை, மற்றும் நிதி சந்தையில் நிலவும் சூழ்நிலையில், வைப்பு நிதியாக செலுத்துவதுதான் பாதுகாப்பானது. இந்த வைப்பு நிதிகளுக்கு கேர்(CARE), இக்ரா (ICRA) ஆகிய ஆய்வு நிறுவனங்கள் பாதுகாப்பை குறிக்கும் மூன்று ஏ (AAA) மதிப்பு பெற்றுள்ளன.
இந்த நிறுவனத்தில் வைப்பு நிதி செலுத்துபவர்களுக்கு, குறிப்பிட்ட ஆண்டு முடிந்தவுடன், கூட்டு வட்டியில் பணம் பெறுவது. மாதா மாதம் வட்டி பெறுவது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி பெறுவது ஆகிய திட்டங்களும் உள்ளன. இதில் ஒரு வருடம் முதல் 7 வருடம் வரை வைப்பு நிதி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.