Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் சாம்ராஜ்ஜியத்தை சல்லி சல்லியாய் நொருக்கிய சியோமி!!

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (16:22 IST)
இந்தியா சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்திய சந்தையில் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி. 
 
ஆம், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன பிராண்டுகளின் ஆதிக்கம் 2019 ஆண்டின் முதல் காலாண்டில் மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது. இந்திய சந்தையில் சுமார் 66% பங்குகளை சீன நிறுவனங்கள் பெற்றுள்ளது. 
 
இது குறித்து கவுண்ட்டர்பாயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சந்தையில் சியோமி 29% பங்குகளுடன் முதலிடத்திலும் சாம்சங் 23% பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்திய சந்தையில் ரெட்மி 6ஏ, ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி வை2, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி ஏ50 உள்ளிட்டவை அடுத்தடுத்து அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன.
 
இதற்கு முன்னர் கவுன்டர்பாய்ண்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நம்பர் 1 இடத்தையும் சாம்சங் தனது இரண்டாம் இடத்தை ஓப்போ, விவோ மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் பகிர்ந்துக்கொண்டது என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments