Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி....

Advertiesment
ரூ.1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி....
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (19:21 IST)
தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல் ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது.


 
 
அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை பல்வேறு சலுகைகளை அளிக்க இருக்கிறது.
 
Diwali with Mi என்ற பெயரில் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை சலுகைகளை வாரி வழங்குகிறது இந்நிறுவனம்.
 
தினமும் காலை 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் ரெட்மி நோட் 4, Mi ரவுட்டர் 3C, ரெட்மி 4, ப்ளூடூத் மினி ஸ்பீக்கர், Mi செல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A, Mi பேண்ட் HRX எடிஷன், Mi கேப்சூல் இயர்போன், Mi வைபை ரிப்பீட்டர், Mi பேக்பேக் மற்றும் Mi VR பிளே ஆகியவற்றை ரூ.1-க்கு விற்பனை செய்யவுள்ளது.
 
மேலும், மீ மொபைல் அப்ளிகேஷன் மூலம் தினமும் மதியம் 2 மணிக்கும் மாலை 6 மணிக்கும் Bid to Win என்ற போட்டி நடைபெறுகிறது.
 
மேலும், ரூ.500 முதல் ரூ.3999 வரை சலுகை அளிக்கும் கூப்பன்களை வெல்ல, சியோமி இணையதளத்தில் உள்ள தி தியா ஹண்ட் என்ற போட்டியில் விளையாட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனுக்கு ஆதரவாக சசிகலா புஷ்பா!