Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்களை மிஞ்சும் விலையுடைய ஸ்மார்ட் டிவி!!

கார்களை மிஞ்சும் விலையுடைய ஸ்மார்ட் டிவி!!
, திங்கள், 19 ஜூன் 2017 (12:07 IST)
ஆஸ்த்ரியாவை சேர்ந்த தொலைகாட்சி தயாரிப்பு நிறுவனமான சி சீட் நிறுவனத்தின் புதிய மாடல் டிவி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
சீ சீட் 262 என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய வைட் ஸ்கிரீன் 4K டிவி என்ற பெருமையை பெற்றுள்ளது.  
 
இந்த மாடல் டிவி எல்-அகௌஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதில் பத்து உயர் ரக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
20.16 அடி அகலம், 8.44 அடி உயரம், 800 நிட் பிரைட்னஸ் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 
 
4K மீடியா சர்வெர் சினிமா அனுபவத்தை வழங்க டிவியின் மானிட்டர் விசேஷ துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. 
 
ரிமோட்டை கிளிக் செய்ததும் திரை தானாக அவிழ்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 800 கிலோ.   
 
இந்திய மதிப்பில் இந்த டிவியின் விலை ரூ.3,53,91,285 ஆகும். இதில் டிவியை பொருத்தும் கட்டணம் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.24,81,902.50 ஆகும். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சரின் வருகையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் (வீடியோ)