வீட்டுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய காற்றாலையை கிரேடு இன்னோவேஷன் என்ற இந்திய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
தினசரி 3 முதல் 5 மணிநேரம் வரை மின்சாரம் வழங்கக்கூடிய மலிவு விலை காற்றாலையை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனை நிறுவ ரூ.60000 முதலீடு செய்ய வேண்டும். இந்த மலிவு விலை காற்றாலை, காற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.
இந்தியா முழுவதுமே மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த மலிவு விலை காற்றாலை தயாரிப்பை மேற்கொண்டுள்ளது.
சோதனை முயற்சியாக, திருவனந்தபுரத்தில் 300 கிலோவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலையை நிறுவி மக்களை ஈர்த்துள்ளது இந்த நிறுவனம்.