சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு வாட்ஸ் ஆப் சேவை கிடையாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிம்பியான் இயங்கு செயலிகளை (ஆபரேட்டிங் சிஸ்டம்) கொண்ட குறிப்பிட்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றிற்கு டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது.
எதிர்கால சேவை மாற்றங்களுக்கு ஏற்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த வகை போன்களில் இல்லை என்பதால் வாட்ஸ் ஆப் இந்த முடிவை எடுத்துள்ளது.
எனவே, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் வேறு போனை மாற்றிவிடுங்கள். அப்போதுதான் வாட்ஸ் ஆப் சேவையை தொடர்ந்து பெற முடியும் எனவும் அறிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கபட வாய்ப்பு உள்ள சில ஸ்மார்ட்போன் மாடல்கள்:
சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள், பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ் 40 மற்றும் நோக்கியா எஸ் 60, ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2, வின்டோஸ் போன் 7.1, ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6.