எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் பணப்பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இன்சூரன்ஸ் போடப்படுகிறது. பொதுவாக இன்சூரன்ஸ் பற்றி எல்லாருக்கும் தெரியும், ரீஇன்சூரன்ஸ் பற்றி தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள்.
நமது பாதுகாப்பு காரணங்களுக்காக காப்பீடு செய்கின்றோம், அதே போல காப்பீடு நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் செய்கின்றனர், இதையே ரீஇன்சூரன்ஸ் அல்லது மறுக்காப்பீடு என அழைக்கிறோம்.
ஆம், ஒரு காப்பீட்டு நிறுவனம் மற்றொரு காப்பீடு நிறுவனத்திலிருந்து தன்னுடைய இழப்புகளை குறைக்கும் பொருட்டு ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்கினால், அது மறுகாப்பீடு எனப்படுகிறது.
காப்பீடு செய்துள்ள நிறுவனம் வசூலித்த பிரீமியம் தொகை வாடிக்கையாலர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு போதுமானதாக இல்லையெனில், மறுகாப்பீடு செய்துள்ள நிறுவனத்திடமிருந்து தொகையை வசூலித்து, இழப்பீட்டை ஈடு செய்யும்.
இத்தகைய சூழலில்தான் மறுகாப்பீடு காப்பீடு நிறுவனத்தை காப்பாற்றும் அல்லது மறுகாப்பீடு மட்டுமே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை திவாலாகாமல் காப்பாற்றும் என்றும் கூறலாம்.