Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோ சாட், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெசன்ஜர்: மூன்றிலும் என்ன இருக்கு?

ஜியோ சாட், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெசன்ஜர்: மூன்றிலும் என்ன இருக்கு?
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (16:58 IST)
ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தனது சாட்டிங் ஆப் ஆன ஜியோ சாட்-ஐ அறிமுகம் செய்தது. ஜியோசாட் அம்சங்கள் ஆனது வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசஞ்சர் போன்றது. இருப்பினும் அவைகளுக்கு இடையிலே என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.

 
மெசேஜிங்: 
 
இந்த மூன்று சேவைகளையும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம்.
 
மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவுசெய்து சாதாரணமாக செய்திகளை அனுப்பலாம்.
ஆஃப்லைனில் இருக்கும் போது கூட செய்திகளை அனுப்ப முடியும். 

 
இணைய இணைப்பிற்குள் நுழையும் போது ஜியோ சாட் தானாகவே செய்திகளை அனுப்பி வைக்க வழிவகுக்கும்.
 
க்ரூப்: 
 
ஜியோ சாட் பற்றிய சிறந்த பகுதியாக அதன் க்ரூப் சாட் திகழ்கிறது ஏனெனில் அதில் 500 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க முடியும். 
 
மெசஞ்சரில் ஒரு நேரத்தில் 150 உறுப்பினர்களுக்கு மட்டுக்குமே ஒரு செய்தியை அனுப்ப முடியும். மறுபக்கம் வாட்ஸ் ஆப் ஆனது வெறும் 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே இடமளிக்கிறது.
 
ஷேர்: 
 
இந்த மூன்று சேவைகளிலும் நீங்கள் பிடிஎப், டாக்ஸ், எம்பி3, படங்கள் போன்றவைகளை பகிர்ந்து கொள்ள முடியும். 
 
உடன் ஜியோ சாட் மூலம் கூடுதலாக டூடுல்களை அனுப்ப முடியும் இது வாட்ஸ் ஆப்பில் இப்போதைக்கு இல்லாத மெசஞ்சரில் ஏற்கனவே இருக்கும் ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குரல் அழைப்பு: 
 
அனைத்து மூன்று சேவைகளும் குரல் அழைப்புக்கு ஆதரவு அளிக்கிறது. 
 
வீடியோ அழைப்பு: 
 
ஜியோ சாட்டில் வீடியோ அழைப்பு ஆதரவு வழங்கபட்டுள்ளது. ஜியோ சாட்டில் இருந்து க்ரூப் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 
 
மெசஞ்சரில் ஒன்-டு-ஒன் வீடியோ அழைப்புகள் அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம், வாட்ஸ் ஆப்-ல் வீடியோ அழைப்புகள் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படியில் பயணம் செய்த மாணவர்களை கடித்த பெண் நடத்துனர் (வீடியோ)