Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப்கேமராவை சிசிடிவியாக மாற்றலாம்.. எப்படினு தெரிஞ்சிகோங்க!!

வெப்கேமராவை சிசிடிவியாக மாற்றலாம்.. எப்படினு தெரிஞ்சிகோங்க!!
, சனி, 24 செப்டம்பர் 2016 (10:22 IST)
வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது கம்ப்யூட்டர் வெப்கேமரா போன்றவற்றைக் கொண்டு வீட்டை எங்கிருந்தும் கவனிக்க முடியும். 

 
வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர் வெப்கேமராவை சிசிடிவி கேமரா போல் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்கலாம்.
 
வழிமுறைகள் (யாகேம் ஆப்): 
 
1. யாகேம் (Yawcam) எனும் செயலியை பயன்படுத்தி கணினியுடன் இணைக்கப்பட்ட எவ்வித கேமராவையும் நேரலை வீடியோக்களை பார்க்க முடியும். இது இலவசமாகக் கிடைக்கும். 
 
2. வழக்கமாக மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் வழிமுறையைப் பின்பற்றி யாகேம் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதோடு வெப்கேமராக்களை சரியாகப் பொருத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 
3. இன்ஸ்டால் செய்த செயலியை ஓபன் செய்து நீங்கள் பயன்படுத்த இருக்கும் கேமராவை தேர்வு செய்ய வேண்டும். இன்டகிரேட்டெட் கேமரா ஆப்ஷன் இருந்தால் யாகேம் செயலி தானாக கேமராவை தேர்வு செய்து கொள்ளும். 
 
4. அடுத்து விண்டோ மெனுவில் இருக்கும் மோஷன் டிடெக்ஷன் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்ததும் கேமராவில் இருந்து பிரீவியூ மோஷன்களை பார்க்க முடியும்.
 
5. அடுத்து செட்டிங்ஸ் சென்று மோஷன்-டிடெக்ஷன் அம்சங்களைச் சரியாக மாற்றியமைக்க வேண்டும். 
 
6. யாரும் இல்லாத போது வேலை செய்யுமளவு கணினியில் செட்டப் செய்ததும், சீரான இடைவெளியில் மின்னஞ்சல்கள் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
 
7. பின்னர், செட்டிங்ஸ் -- ஆக்ஷன் -- செக் சென்ட் மெயில் ஆப்ஷன்களை கிளிக் செய்தால் சீரான இடைவெளியில் ஸ்னாப்ஷாட் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் பெற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 ஏக்கர் நிலம்; 3078 வங்கி கணக்கு; 150 கார் ; 40 ஆயிரம் கோடி : ரோஸ் வாலி நிறுவன மோசடி