முதன்முதலாக ரூ.346க்கு ரிசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 56GB 56 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டும் என வோடாபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை மார்ச் மாதத்துடன் முடியவடைகிறது. ஏப்ரல் மாதல் கட்டணம் சேவை தொடர்கிறது. இதற்கான பட்டியலை ஏற்கனவே ஜியோ நிறுவனம் வெளியிட்டது. ஜியோ பிரைம் திட்டத்தில் இணைபவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடைய மற்ற முன்னணி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வேடாபோன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஜியோவின் பிரைம் திட்டத்தை தொடர்ந்து வோடாபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு 28GB டேட்டா இவலசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.346க்கு ரிசார்ஜ் செய்துக்கொண்டால் தினமும் 1GB என மாதம் 28GB இலவசமாக வழங்கப்படும். அதோடு அனைத்து கால்கள் இலவசம். இத்திட்டத்தில் முதன்முதலாக ரிசார்ஜ் செய்பவர்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கப்படும்.
ரூ.346க்கு 56 நாட்கள் 56GB வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வோடாபோன் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக இதை அறிமுக செய்துள்ளது. மேலும் இதை மார்ச் 15ஆம் தேதிக்குள் ரிசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.