இந்தியாவின் முன்னணி மூன்றாம் நிலை தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா இணைந்து முதல் நிலை தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுக்க திட்டமிட்டு வருகின்றன.
இருப்பினும் இந்த இணைப்பிற்கு முன்னர், இரு நிறுவனங்களின் கடன் சுமைகளை குறைக்க திட்டமிட்டுள்ளன. இதனால், இரு நிறுவனங்களும் தங்கள் வசம் உள்ள செல்போன் டவரை விற்க முடிவு செய்துள்ளன. மேலும், புதிய முதலீடுகள் மூலமும் ரூ.500 கோடி டாலர் கடன் சுமையை குறைக்கும் திட்டமிட்டு வருகின்றன.
வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இணைய முடிவு செய்துள்ளன. எனவே, இதற்கு முன்பாக கடன் பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளனர். ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ள நிலையில், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் செயல்பாட்டு வருமானம் பெருமளவு குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.