வி நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 - 25% வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக இயங்கி வந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்தன. அதன்பிறகு வோடபோன் ஐடியா லிமிட்டட் என்ற பெயரிலேயே இயங்கி வந்த நிலையில் தொழில் போட்டியின் காரணமாக பலத்த பின்னடைவை சந்தித்தன.
இந்நிலையில் வோடபோன் ஐடியா என்ற பெயரை சுருக்கி Vi என்ற புதிய பெயருடன், புதிய லோகோவுடன் வந்துள்ளது. இந்நிலையில் வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 - 25% வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. புதிய விலை உயர்வு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.