Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புது அறிவிப்பு..

Advertiesment
போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புது அறிவிப்பு..
, திங்கள், 19 மார்ச் 2018 (15:14 IST)
தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. 
 
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போது டிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இது குறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு...
 
இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். 
 
இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
 
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. 

புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா புஷ்பாவிற்கு திருமணம்? - யார் இந்த ராமசாமி?