நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கிகளுக்கு அதானி குழுமம் மட்டும் வங்கிகளுக்கு திருப்பித் தர வேண்டிய கடன் தொகை ரூ.72,000 கோடியாகும் என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி, "நாடு முழுவதும் உள்ள பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை திருப்பித் தரவில்லை.
இந்த வாராக்கடன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவர்களில் 10 கார்ப்பரேட் கம்பெனிகள் முதலிடத்தில் உள்ளன.
உஷா இஸ்பேட், லியாய்ட்ஸ் ஸ்டீல், இந்துஸ்தான் கேபிள்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், சூம் டெவலப்பர்ஸ், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், கிரேன் சாஃப்ட்வேர்ஸ் இண்டர்நேஷனல், பிராக் போஸ்மி சிந்தட்டிக்ஸ், கிங் பிஷர் (விஜய் மல்லையா) மற்றும் மால்விகா ஸ்டீல் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள் வைத்திருக்கும் கடன் தொகை ரூ.5.73 லட்சம் கோடியாகும்.
இவற்றில் சேராத மோடியின் நெருங்கிய நண்பர் அதானியின் கடன் ரூ.72,000 கோடியாகும். இந்த பட்டியலில் 5 கம்பெனிகள் மட்டும் திருப்பித்தராத கடன் ரூ.1.4 லட்சம் கோடியாகும்.
அதானி கார்ப்பரேட் குழுமம் பெற்றுள்ள சலுகைகள் மிகவும் அதிகமானது. குஜராத்தில் அதானி கம்பெனி உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தையே உடமையாக வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.