Publish Date: Wed, 25 Sep 2024 (09:56 IST)
Updated Date: Wed, 25 Sep 2024 (09:58 IST)
தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரன் 480 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்தை ந்ரெஉங்கி உள்ளதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் 60 ரூபாயும் ஒரு சவரன் 480 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7060 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய் 56,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,515 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது