Publish Date: Thu, 11 Apr 2024 (11:35 IST)
Updated Date: Thu, 11 Apr 2024 (11:36 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 அதிகரித்து ரூபாய் 53,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7195 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 88.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88500.00 எனவும் விற்பனையாகி வருகிறது