Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ரூ.54,000ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:35 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 அதிகரித்து   ரூபாய் 53,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7195  எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 88.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments