Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.399-யில் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட் சுதந்திர தின ஆஃபர்

ரூ.399-யில் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட் சுதந்திர தின ஆஃபர்

ரூ.399-யில் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட் சுதந்திர தின ஆஃபர்
, புதன், 10 ஆகஸ்ட் 2016 (10:51 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விலையில் விமான பயண டிக்கெட்களை விற்பனை செய்ய உள்ளது.


 


இந்தியாவில் மலிவுவிலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது பயணிகள் சேவை விமான டிக்கெட்டின் விலையை ரூ.399 ஆக குறைத்து, சுதந்திர தின சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. 399 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டுமே.

ஆகஸ்ட் 11 வரை இந்த ஆஃபர் விலை டிக்கெட் கிடைக்கும் என்றும், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயண டிக்கெட்களை இந்த சலுகை விலையில் பெற்று பயன் பெறலாம் என்று  ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

இந்த ஆஃபர் விலை அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், பெங்களூரு-சென்னை, பெங்களுரூ-கொச்சி, கோயம்புத்தூர்-ஹைதெராபாத், ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் மும்பை-கோவா போன்ற பிரபலமான வழித்தடங்களில் மட்டுமே என்றும் அறிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுவிலக்கை மீறியதாக ஒரு கிராமத்திற்கே அபராதம்!