ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.699-க்கு விமான பயணம் செய்யும் சலுகையை வெளியிட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையையும் துவங்கியுள்ளது.
இந்த சலுகை மூலம் ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு, கவுகாத்தி - அகர்த்தலா, ஐஸ்வால் - கவுகாத்தி மற்றும் பல இடங்களுக்கு செல்லுபடியாகும்.
டிக்கெட் மற்றும் வரி உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.699 மட்டுமே என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் புக் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த சலுகை விலையில் டிக்கெட் புக் செய்பவர்களில் பரிசு பெறுபவருக்கு சர்வதேச சுற்றுலா செல்ல டிக்கெட் வழங்கப்படும்.
புக்கிங் இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறும். ஜுலை 14, 2017 முதல் 24 மார்ச் 2018 வரை எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.