இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் ஒன்பிளஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆம், இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவமான ஒன்பிளஸ் முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில், 2019 ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் என்னும் ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விற்பனையே சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடிக்க காரணமாக அமைந்திருக்கிறது எனவும் கவுன்ட்டர்பாயின்ட் குறிப்பிட்டுள்ளது.