Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐயோ பத்திக்கிச்சு... தீ பற்றிய 5ஜி போனுக்கு இழப்பீடு தர மறுத்த சாம்சங்!!

Webdunia
வியாழன், 2 மே 2019 (13:43 IST)
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் தீ பிடித்து எரிந்ததற்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர மறுத்துள்ளது.
 
கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் சமீபத்தில்தான் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி எஸ்10 5ஜி போனும் அடக்கம். இதுதான் உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என விளம்பரம் செய்யப்பட்டது. 
 
இந்த ஸ்மார்ட்போனை வாங்கி இருந்தார் லீ என்ற வாடிக்கையாளர். இவர் இந்த ஸ்மார்ட்போன் மேஜை மீது எந்த இடையூறும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த போது எந்த காரணமும் இல்லாமல் ஸ்மார்ட்போன் தானாவே தீ பிடித்து எரிந்தது என்று புகார் அளித்திருந்தார். 
இந்த புகார் குறித்து விசாரித்த சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனில் உள்ள கோளாறால் தீ பிடிக்கவில்லை, ஸ்மார்ட்போனுக்குள் எந்த கோளாறுமில்லை வெளியிலிருந்து ஏதோ தாக்கத்தால் தீ பற்றியிருக்க கூடும் என பதில் அளித்தது. அதோடு இழப்பீடும் தர மறுத்துள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,200 டாலராகும் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83,500 ரூபாய். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments