நாடு முழுவதும் உள்ள ஜன்தன் வங்கிக் கணக்குகளில், ரூ.74,321 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக, செல்லாத ரூபாய் நோட்டுகளை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துவருகின்றனர்.
இதில், பலரும் பிரதம மந்திரியின் ஜனதன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இலவச வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக, ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட்களின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. நவம்பர் 30ம் தேதியின்படி, மொத்தம் ரூ.74,321 கோடியே 55 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, நவம்பர் கடைசி வாரத்தில் மட்டும் ரூ.1,487 கோடி டெபாசிட் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.