Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொத்தின் 10%; ரூ.7000 கோடியை என்ன செய்தார் தெரியுமா ஏர்டெல் நிறுவனர்??

சொத்தின் 10%; ரூ.7000 கோடியை என்ன செய்தார் தெரியுமா ஏர்டெல் நிறுவனர்??
, வெள்ளி, 24 நவம்பர் 2017 (18:43 IST)
பார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துக்கள் பொது சேவைக்காக வழங்கப்படும் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் நிறுவனர் பொது சேவைக்காக சொத்துக்கள் வழங்கப்படுவது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும் பார்தி பவுன்டேஷன் அமைப்பிற்காக பார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துகள், அதாவது  ரூ.7,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். 
 
இந்த 10 சதவீத சொத்துகளில், குடும்பத்தின் வசமுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 3 சதவீத பங்குகள் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
பார்தி குழுமம் சமூகத்தில் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள இளைஞர்களின் இலவச கல்விக்காக சத்ய பார்தி பல்கலைக் கழகத்தை துவங்கவுள்ளது.
 
இந்த பல்கலைக் கழகம் அறிவியல் தொழில்நுட்ப கல்விக்கு முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையதள புத்தாக்கம் போன்ற கல்விக்கு முன்னுரிமை அளிக்குமாம்.
 
இந்த பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் 10,000 மாணவர்கள் கல்வி கற்கும் வசதி இருக்கும். ஆனால், பல்கலைக்கழகம் எங்கு துவங்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலுறவில் உச்சம் பெற்று பார்வையை பறிகொடுத்த வாலிபர்...