Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூவா காசு போட்டு போன் பேசுவியா நீ? பயனர்களை கடுப்பேற்றும் ஏர்டெல்!!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (13:24 IST)
ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை கடுப்பேற்றும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ஆறு டாக் டைம் திட்டங்களை வழங்குகிறது.அவை ரூ.10, ரூ.20, ரூ.100, ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5,000 என்ர விலையில் கிடைக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவெனில், பயனர்கள் எந்த விலையில் டாக் டைம் ரீசார்ஜ் செய்தாலும், இதனோடு கட்டாயம் ஸ்மார்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே டாக் டைம் ரீசார்ஜ் செயல்படுமாம். 
அதாவது, நீங்க ரூ.5,000-க்கு ரீசார்ஜ் செய்தாலும் அல்ல ரூ.10-க்கு ரீசார்ஜ் செய்தாலும் கட்டாயம் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜை (மினிமம்) செய்திருக்க வேண்டும். ரூ .45 ஸ்மார்ட் ரீசார்ஜ் தவிர, ரூ.49, ரூ.79 ஆகிய விலைகளிலும் ஸ்மார்ட் ரீசார்ஜ் கிடைக்கிறது.
 
ஸ்மார்ட் ரீசார்ஜ் எந்த விதமான டால்க் டைம் நன்மையையும் தராது மாறாக  இது 28 நாட்களுக்கு ரேட் கட்டர் மற்றும் சேவை செல்லுபடியாகும் சலுகைகளை மட்டுமே வழங்கும் ஒன்றாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments