Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக வேண்டுமா? இதோ அரிய வாய்ப்பு!!

Advertiesment
ரிலையன்ஸ்
, வியாழன், 23 மார்ச் 2017 (15:13 IST)
ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் இலவச சேவைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 


 
 
வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் மார்ச் 31-க்குள் ரூ.99 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்நிலையில் புதிய ஜியோ பிரைம் திட்டத்திற்கு இலவசமாக பதிவு செய்ய ஒரு வழிமுறையை ஜியோ வழங்கி உள்ளது.
 
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தை இலவசமாக பெற Jio Money எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலியை கொண்டு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
அதாவது ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.50 கேஷ்பேக் மற்றும் ரூ.303 மற்றும் அதற்கும் அதிகமான விலையை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படும்.
 
இவ்வாறு செய்வதால் ஜியோ பிரைம் திட்டத்திற்கு செலுத்தும் ரூ.99 கேஷ்பேக் பெயரில் நமக்கே மீண்டும் வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னிடம் நிஷா பேசவில்லை; மலரோ, முள்ளோ.... நீயா நானா கோபிநாத் உருக்கமான கடிதம்