மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்கள் இணைந்துள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை தெரிவிக்கிகிறது.
அதேபோல் பிஎஸ்என்எல் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இவ்விரு நிறுவனங்கள் மட்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதேவேளையில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம் வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் நிறுவனம் 8,068 வாடிக்கையாளர்களையும் மற்றும் ஆர்காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.