Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் - ஏர்செல் புதிய கூட்டணி

மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் - ஏர்செல் புதிய கூட்டணி
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:28 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வரும் செப்டம்பரில் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.


 
 
இணைக்கப்படும் இரு நிறுவனங்களும் 14,000 கோடி கடனை இடமாற்றம் செய்யும் நோக்கத்தில், 196 மில்லியன் பயனர்களை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2015 -16 நிதி ஆண்டு இறுதியில் 41,362.1 கோடி கடன் கொண்டுள்ளது மறுபக்கம் ஏர்செல் நிறுவனத்தின் கடன் புள்ளி விபரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
 
இரண்டு நிறுவனங்களுக்கு இடையே உள்ள இணைப்பு உறுதியான ஒப்பந்தமாகும். இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலேயான சொற்கூறு படிவங்கள் தயாராகிவிட்டது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த புதிய நிறுவனம் 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ்களில் அடங்கும் அனைத்து அலைவரிசையை ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்றுள்ளது. 
 
7,000 கோடி செலவில் ஆரம்பிக்கும் இந்த புதிய நிறுவனத்தின் முதல் நாள் பணப்புழக்கமானது 25,000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தம்பதியரை ஏமாற்றிய நடிகர் சரத்குமார்!