Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (14:46 IST)
சீன நிறுவனமான சியோமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 
பிப்ரவரி 28 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகை விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரியும், மற்றொரு 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி என வேரியண்ட் மாடலாக விற்பனையாகிறது. 
 
இவற்றின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 ஆகும். ஆனால், இப்போது ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.11,999 மற்றும் ரூ.13,999 என விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, ப்ளிப்கார்ட் தவணை முறை வசதி, ரூ.11,950 வரை எக்சேஞ் ஆஃபரையும் வழங்குகிறது. 
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
# அட்ரினோ 509 GPU, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி 
# ஹைப்ரிட் டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
# 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0
# 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு வண்ணங்களில் கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments