ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருவதற்கு முன்னர் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் ஆப்லைனில் அதிக சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகும் சில சலுகைகள் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் அறிவிக்கப்படுவதாக வாட்ஸ் ஆப்-பில் செய்திகள் வெளியாகிறது.
ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல்கள் ரூ.1,099 மற்றும் ரூ.1,299 விலையில் விற்பனைக்கு உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம்யுள்ளன.
ஆனால் இவை அனைத்தும் வதந்திகள் என கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற போலி சலுகைகள் ஜிஎஸ்டி என்ற பெயரில் வருவது அதிகரித்துள்ளது.