Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரதிர்ச்சி; பேஸ்புக் புகைப்படங்கள் இணையத்தில் லீக்: அடுத்து என்ன செய்வது?

பேரதிர்ச்சி; பேஸ்புக் புகைப்படங்கள் இணையத்தில் லீக்: அடுத்து என்ன செய்வது?
, சனி, 15 டிசம்பர் 2018 (12:14 IST)
பேஸ்புக் நிறுவனம் தனது பிழையால் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் பேஸ்புக் பயன்கர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, பேஸ்புக் பயனர்களின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 
 
ஆம், அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சுமார் 6.8 மில்லியன் பயனர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
பேஸ்புக்-ல் பதிவிடப்படும் புகைப்படங்களை அணுக முடியாத அளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், பேஸ்புக் தளத்தில் அப்லோட் செய்யப்படும் புகைப்படத்தை மூன்றாம் தரப்பு செயலிகள் எளிதில் அணுகுவதற்கான அனுமதியை வழங்கி பெரிய தவறை செய்துள்ளது.  
webdunia
இந்த பிரச்சனை இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது எனவும், இந்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இனி இதை தடுக்க தனி டூல் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது.
 
இம்முறை நடந்த இந்த பிழையில் பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், பேஸ்புக்-ல் இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது அதிகரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரம்ப்பை முட்டாளாக்கிய கூகுள் – வைரல் ஆகும் இணையதளத் தேடல்