பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணப் பரிவர்த்தனை கட்டணத்தை முடிவு செய்துள்ளது.
இதனால் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் வரம்பிற்கு அதிகமாக ஏடிஎம், மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்திப் பரிவத்தனை செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய இணையதளத்தில் இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் கவனிக்க வேண்டியவை...
# பணப் பரிவத்தனை கட்டணம் 50 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
# சேமிப்புக் கணக்குக்கு வங்கிகள் குறைந்தது 5 பரிவர்த்தனையை இலவசமாக அளிக்க வேண்டும்.
# இணையதள வங்கி சேவை பரிமாற்றம்:
1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
# எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள்:
முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
# என்ஈஎப்டி முறையில் இணையதள வங்கிகளில் பரிவர்த்தனை:
10,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 2 ரூபாயும், வங்கி கிளையில் செய்யும் போது 2.50 ரூபாயும் வசூலிக்கப்படும்.
என்ஈஎப்டி முறையில் 10,000 ரூபாய் முதல் 1,00,000 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 4 ரூபாயும், இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
என்ஈஎப்டி முறையில் 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 12 ரூபாயும், இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
என்ஈஎப்டி முறையில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 20 ரூபாயும் இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.