Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்றும் வழிமுறைகள்

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்றும் வழிமுறைகள்
, புதன், 28 செப்டம்பர் 2016 (11:40 IST)
பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறையால் பதிவு செய்யப்படும். எனவே, முகவரியை மாற்றினால், அதனை பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதனை இனி ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.

 
வருமான வரித்துறை இணைய முகவரிக்குச் சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையை மறக்க கூடாது.
 
பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். 
 
மாற்றப்படும் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ரூபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).
 
கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம் கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.
 
கட்டணம் செலுத்திய பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை பதிவு செய்தோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வைத்துக்கொள்ள வேண்டும்.
 
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.
 
பின்னர், விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்டு அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
 
முகவரி: NSDL e-Governance Infrastructure Limited, 5th floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune - 411016'. 
 
குறிப்பு: அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீயோ வெண்ணை; உன் கன்னமோ காஷ்மீர் ஆப்பிள்: நர்ஸை வர்ணித்த சர்ச்சை சாமியார்!