Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க OTP: விவரங்கள் உள்ளே!!

Advertiesment
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க OTP: விவரங்கள் உள்ளே!!
, சனி, 9 டிசம்பர் 2017 (15:39 IST)
பல்வேறு அரசு சேவைகளை பெறுவதை எளிமையாக அரசு ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பதை வலியுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில், மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு எளிமையான வழி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் இதற்கான வேலையில் இறங்கியுள்ளனர். வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் ஆதார் எண்ணை இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வழிமுறைகள்: 
 
# மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அந்த மொபைல் எண்ணில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனம் அளிக்கும் ஆதார் இணைப்பு தானியங்கி எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும். 
# அப்போது கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றி, ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும். குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும். 
# இதனை சரியாக பதிவு செய்தால் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சவீதா பல்கலைகழகத்தில் 2 வது நாளாக தொடரும் போராட்டம்.