Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒப்போ F7 அறிமுகம்: விவரம் உள்ளே...

Advertiesment
ஒப்போ F7 அறிமுகம்: விவரம் உள்ளே...
, புதன், 28 மார்ச் 2018 (14:29 IST)
ஒப்போ நிறுவனம் ஒப்போ F7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பொதுவாக செல்பி எடுக்க ஏதுவாக வடிவமைக்கப்படும். இதுவும் அது போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாம். 
 
ஒப்போ F7 சிறப்பம்சங்கள்:
 
# 6.23 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 IPS டிஸ்ப்ளே
# 4 ஜிபி, 6 ஜிபி ராம்
# 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, HDR,  சோனி IMX576 சென்சார்
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3300 எம்ஏஹெச் பேட்டரி
ஒப்போ F7 ஸ்மார்ட்போன் சோலார் ரெட், மூன்லைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.21,990.
webdunia
இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட சன்ரைஸ் ரெட் நிறத்தில் ஒப்போ F7 ஸ்மார்ட்போன் ரூ.26,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
ஸ்பெஷல் எடிஷனாக டைமன்ட் பிளாக் நிற ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.26,990 என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக்கர் சின்னத்திற்கு நீதிமன்றம் தடை : தினகரன் அதிர்ச்சி