Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடையில் தொடங்கி அலங்காரப்பொருட்கள் வரை: சென்னை 4வது இடம்

Advertiesment
ஆடையில் தொடங்கி அலங்காரப்பொருட்கள் வரை: சென்னை 4வது இடம்
, புதன், 28 டிசம்பர் 2016 (19:29 IST)
ஆடையில் தொடங்கி அலங்காரப்பொருட்கள் வரை நமக்கு தேவையானவற்றை தற்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்து கொள்கிறோம். இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் சென்னை 4வது இடத்தை பிடித்து உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

 
ஸ்மார்ட்போன் உபயோகம் அனைவரிடமும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், அனைவரும் இணையதளம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பெரும்பாலா மக்கள் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடை, மொபைல் போன், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றை பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வாங்கத் தொடங்கிவிட்டனர்.
 
இதனால் இந்தியாவில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முண்ணனி நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் அதிகம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் முண்ணனி மெட்ரோ நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
அதில் டெல்லி முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து, பெங்களூர், மும்மை, சென்னை, ஐதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது. இதில் சென்னை 4வது இடத்தில் உள்ளது குறிபிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணைய வேகத்துக்கு இந்தியா தள்ளுமுள்ளு: அதிர்ச்சி ரிப்போர்ட்