நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக நோக்கியா அறிவித்துள்ளது.
	
	 
	கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும், கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனும் தற்போது ரூ. 3500 வரை விலை குறைப்பை பெற்றுள்ளது. 
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	ரூ. 15,999 விலையில் வெளியிடப்பட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் தற்போது  ரூ.3500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
	 
	இதேபோல ரூ. 18,599 விலையில் வெளியிடப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின், 
	1. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி விலை ரூ. 3,100 குறைக்கப்பட்டு ரூ. 15,499 விலையிலும், 
	2. 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி விலை ரூ. 2,500 குறைக்கப்பட்டு ரூ. 17,099 விலையிலும் விற்கப்படுகிறது.